தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காரியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 12.01.2024 முதல் 02.02.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.02.2024 பிற்பகல் 5.45 மணி வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 12.01.2024 முதல் 02.02.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் காரிமங்கலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
Share This