8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தூத்துக்குடி இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV License with Batch. நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவு காவலர்

சம்பளம்: மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக படிக்க தெரிந்தவராகவும் எழுத தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும் நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்.

வயது:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2024 மாலை 5.45 மணி வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பபடிவத்தினை இணை ஆணையர் அலுவலக விளம்பர பலகை மற்றும் TNHRCE Website ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதி உள்ள இந்த சமயத்தை சார்ந்தவர்கள் மட்டும் 17.01.2024 மாலை 5.45 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்களின் நகல்களின் சான்றிட்டும், புகைப்படத்துடன் சுயவிலாசம் இட்ட ரூ.25 கான தபால் தலை ஓட்டிய உரை ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இருப்பிட முகவரி ,அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர் “அலுவலக உதவியாளர்” பணியிடம் என்றும் இரவு காவலர் பணியிடத்திற்கு “இரவு காவலர்” பணியிடம் என்றும் ஓட்டுநர் பணியிடத்திற்கு “ஓட்டுநர்” பணியிடம் என்றும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

இணைத்து அனுப்பப்பட வேண்டிய விவரங்கள்:

  1. விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
  2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான /பெறாததற்கான கல்வி சான்று நகல்
  3. ஓட்டுநர் உரிமம்
  4. பள்ளி மாற்று சான்று நகல்
  5. ஜாதி சான்று நகல் (வட்டாட்சியினால் வழங்கப்பட்டது)
  6. தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல், குடும்ப அடையாள அட்டை நகல்
  7. இன சுழற்சி முறைக்கு உரிய சான்றின் நகல்
  8. இதர தகுதிகள் ஏதும் இருப்பின் அதன் விவரம் மற்றும் நகல்கள்
  9. சுய விலாசம் இட்ட ரூ.25 கான தபால் தலை ஓட்டிய உரை-1.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணை ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை,

35/1A, மேலரத வீதி தூத்துக்குடி – 628 002

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment