[rank_math_breadcrumb]

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024! எழுத்தர், கணினி பணியாளர்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் வெளித்துறை மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 வயது முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி.

பதவியின் பெயர்: கணினி பணியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம்.

2. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: நாதஸ்வரம் (மேளம் குழு)

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

2. சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு அல்லது பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்த பெறும் இசை பள்ளியில் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தோட்டம்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

பணியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

வயது:

விண்ணப்பதாரர் 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

1. இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. விண்ணப்ப படிவம் இந்து சமய அறநிலை துறையின் TNHRCE இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3. பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் “பணியிட வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், அஞ்சல் எண் – 610204 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூபாய் 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உரையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

5. விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.

6. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

7. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

8. விண்ணப்பங்கள் அனுப்பும்போது மேல் உரையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

9. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

10. பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 02.01.2024 தேதி முதல் 31.01.2024 தேதி வரை மாலை 5:45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவும் அல்லது பின்னதாகவோ ஒரு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here

விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024! Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment