[rank_math_breadcrumb]

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காரியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 12.01.2024 முதல் 02.02.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01

இன சுழற்சி – ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (பெண்) (ஆதரவற்ற விதவை)

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: பதிவரை எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15900 முதல் ரூ.50400 வரை

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01

இன சுழற்சி – பொது போட்டி

கல்வி தகுதி: பதிவரை எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024

வயது:

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 12.01.2024 முதல் 08.02.2024 வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை)

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

1. அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் காலிபணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட www.chengalpattu.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை மேற்படி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. விண்ணப்பங்கள் சமர்பிக்கவேண்டிய இறுதி நாளான 08.02.2024 மாலை 5.45 மணிக்கு பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.02.2024 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்.

திருப்போரூர்.

4. சுயமுகவரியுடன் கூடிய ரூ.30/- அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை – 1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்படவேண்டும்.

5. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று. முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.

6. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

7. இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

8. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

9. தேர்வு செய்யப்படும் நபர்கள் அரசாணை (நிலை) எண் 303நிதி (ஊதியக்குழு) துறை நாள் 11.10.2017 அரசாணை நிலை எண் 305 நிதி (ஊதியக்குழு ) துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை (நிலை) எண் 306 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

பதிவரை எழுத்தர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Click here

அலுவலக உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Click here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

Share This
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு Click here

Leave a Comment