பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த சேவை மையம் வடசென்னைக்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், பன்முக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.20000/-
வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
சமூகப் பணியில் முதுகலை பட்டம் M.S.W (Master’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
ஆலோசனை உளவியல் M.SC (Counselling Psychology), வளர்ச்சி மேலாண்மை (Development Management) குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து காக்கும் அரசு அல்லது அரசு சார்ந்த திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணி புரிந்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருட கால அனுபவத்தில் அதே அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்து இருக்க வேண்டும்.
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளுறை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.6400/-
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளுறை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
வயது:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 14.02.2024 மாலை 5:00 மணி வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றுகளுடன் 14.02.2024 5.00 மணிக்குள் “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை 01″ என்ற முகவரியில் நேரடியாகவும், மின்னஞ்சல் (oscnorthchennai@gmail.com) மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024! Typist, Telephone Operator, Cashier மற்றும் Xerox Operator
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை! மாதம் ரூ.116200 வரை சம்பளம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024! எழுத்தர், கணினி பணியாளர்
தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு!
Share This