தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் கீழ்கண்ட காலிபணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.01.2024 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: நூலகர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. இலகு ரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
3. ஓராண்டு ஓட்டுனர் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
பதவியின் பெயர்: உதவி மின் பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை
பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. மின் உரிமம் வழங்கள் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2024 மாலை 5.45 மணி வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்து சமய அறநிலை துறையின் TNHRCE இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- வயது சான்றிதழ் நகல்
- ஆதார் அட்டை நகல்
- கல்வி தகுதி சான்றிதழ் நகல்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை-4.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
Share This